ஞாயிறு வாசகர் வட்டம்

கவிதையின் கருப்பொருள்

ஷா நவாஸ்

“கவிதை என்பது கொஞ்சம் நுட்பமான விஷயங்களுக்குரியது. அன்றாட அரசியலின் செயற்கையான உணர்ச்சிகளுக்காக படிமங்களையும் சொற்களையும் பயன்படுத்துவது கவிதையைக் கொல்வதுதான். இத்தகைய சூழலில் அக்கவிதையின் இலக்கியத்தன்மை பற்றி பேசலாமா என்று கேட்கலாம். கண்டிப்பாகப் பேசவேண்டும். இத்தகைய மலினமான விவாதங்கள் வழியாக அந்த நாலாந்தர ஜோடனைக் கவிதை ஓர் இலக்கிய அடையாளமாக ஆகிவிடக்கூடும். அதை அடையாளம் காட்டுவது இலக்கியவிமர்சகனின் கடமை.

என்று மனுஷ்யபுத்திரனின். கவிதையின் இலக்கியத்தரத்தை ஜெயமோகன் கேள்விக்கு உட்படுத்துகிறார் ..

அராஜகத்தின் முகமூடி

இங்கிலாந்து மக்களுக்கான பாட்டு

Song to the men of England

கவிஞர்கள் ,உலகப் பேரவையின் அக்கீகரிக்கப் படாத உறுப்பினர்கள் (poets are in acknowledged legislators of the world) அன்றாட அரசியலை உருவகப்படுத்தி எழுச்சியுறச் செய்த ஷெல்லியின் கவிதைகள் இலக்கியமில்லையா ?

ஜே எம் சாலி

என் எழுத்துப் பயணமும் கவிதையில்தான் ஆரம்பமானது ,ஆனந்த விகடன் துணை ஆசிரியராக இருந்தபோது வைரமுத்து கவிதைத் துணுக்கை முதன் முதலில் அச்சில் கொண்டு வந்த நினைவுகளுடன்

ஆசிரியர் பால சுப்ரமணியம் கவிதைகளைத்

தேர்ந்தெடுக்க எனக்களித்த சுதந்திரத்தை எண்ணிப் பார்க்கிறேன் .

மாமன்னன்

கவிதையும் கருப்பொருளும் …

தோன்றின் புகழோடு தோன்றுக….

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது என்ற மு வா வின் திருக்குறள் விளக்க உரையும்

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

என்ற சாலமன் பாப்பையாவின் உரையும்

தராத விளக்கத்தை

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என்ற கலைஞரின் திருக்குறள் விளக்க உரை எனக்குத் தந்தது ,கலைஞர் இலக்கியவாதியா என்ற சர்ச்சை எனக்கு பொருட்டல்ல ,இலக்கியத்தை மனதுக்கு நெருக்கமாக ஆக்கியவர் கலைஞர் ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here