வாசகர் வட்டமும் ,தேசிய நூலகத் தமிழ்ச் சேவைப்பிரிவும் இணைந்து நடத்தும்
நா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள் …

வாசகர் வட்ட நண்பர்கள் தவறாது கலந்து கொள்ளவும் .

ரெ.பாண்டியன்,த.இராஜசேகர்,என்.விஜயன் ஆகியோரால் 1988-ல்
ஆரம்பிக்கப்பட்டுதேவன்,ஜி.அரவிந்தன்,கண்ணன்,அமிருத்தீன்,போப்பு,பாலமலர், ரத்தினாவதி முதலியோரால் வளர்க்கப்பட்ட ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு, 25 வயது முதல் 30 வயதுவரை உள்ள இளம் படைப்பாளிகளை, வாசகர்களைத் தொடக்கத்தில் உள்ளடக்கிச் செயல்பட்டது. இந்த அமைப்பு ஆரவாரம் இல்லாமல் இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. நா.கோ. ‘வாசகர் வட்டம்’ அமைப்பின் ஆரம்பக் காலத்தில் அதில் ஆர்வம் கொண்டு வட்ட உறுப்பினர்களை ஊக்குவித்தார். தமிழகத்தின் அன்றைய சிறு பத்திரிகைகளான ‘கணையாழி” ‘தீபம்’ ‘பிரக்ஞை’ ‘இனி’ ‘காலச்சுவடு’ போன்ற இதழ்களை வாசகர் வட்ட இளம் உறுப்பினர்களுக்குத் தந்து இலக்கியச் சிற்றேடுகளின் உலகத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்…

-இராம கண்ணபிரான் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here