பள்ளி மாணவர்களிடம் சுற்றுலாப்பயணம் போய்வந்தவுடன் அதைக்குறித்து ஒரு குறிப்பு எழுதச்சொல்வார்கள். அனுபவங்களைச் சொற்களில் சிறைப்பிடிக்க ஊக்கப்படுத்தும் முயற்சி அது.

உணர்வுகள் வழியாக உயிரோடு கலந்து நிலைத்துவிடும் அனுபவங்களை, அவற்றின் சுனையும் சுவையும் மழுங்காமல், சொற்களில் வடித்துவிடும் ஆற்றலுள்ளவர்களே காலத்தில் காணாமற்போகாத எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.

ஷாநவாஸின் புனைவு, அபுனைவு இரண்டிலும் அனுபவங்களுக்கே முதலிடம். அவர் கதைகளை வாசித்திராதவர்கள் கீழ்க்கண்ட பதிவில் இரு கதைகளைக்குறித்துச் சுருக்கமாக ருசி பார்க்கலாம்.
https://sivananthamneela.wordpress.com/…/%E0%AE%92%E0%AE%B…/

வாழ்க்கை ஒரு பயணம் என்பதால் அதன் அர்த்தத்தை அனுபவங்களில்தான் தேடவேண்டும். அந்த வகையில் அனுபவங்களைச் சிதறாமல் எழுத்தில் கோர்த்துவிடும் ஷாநவாஸ் அவர்களோடு உரையாடுவது மேலும் சிறப்பான ஓர் அனுபவம்!

வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு அங்மோகியோ நூலகத்தில் சந்திப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here