வான்மீகி ராமாயணத்தை முதனூலாகக்கொண்டு கம்பநாடர் இயற்றிய இராமாவதாரம் என்னும் தமிழ்க் காவியம், ஸ்ரீராமபட்டாபிஷேகம் ஈறாக ஆறு காண்டங்களை உடைத்தாய் அமைந்துள்ளது. கம்பராமாயணத்திற்கு மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் குறிப்புகளைக் கொண்டு, விரிவான உரையுடன் அவர் பெயரைத் தாங்கிய நூல்நிலையத்தாராலும், பெங்களூரைச் சேர்ந்த மாறன் பதிப்பகத்தாராலும் பாலகாண்டம் தொடங்கி சுந்தரகாண்டம் வரையிலான ஐந்து காண்டங் களுக்கும் ஐந்து தொகுதிகளும், யுத்தகாண்டத்திற்கு நான்கு தொகுதிகளுமாக மொத்தம் ஒன்பது தொகுதிகளாக ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்பு வெளியிடப்படுகிறது.
மூலநூலான வான்மீகி இராமாயணத்தின் கதைப்போக்கு மற்றும் நிகழ்ச்சிகளில் பெரிதும் ஒத்ததாகத் தன் இராமாவதாரத்தை அமைத்த கம்பன், பலவிடங்களில் தான் அமைத்துக்கொண்ட பாத்திரங்களின் தன்மை, தன் காலம் மற்றும் தான் சார்ந்திருந்த பாரதப்பகுதியின் பண்பாடு முதலியவை களுக்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களையும் செய்யத் தவறவில்லை. இராமாயணத்தின் முக்கிய நிகழ்வாயினும் கம்பனின் தனித்த அனுபவம் அறியும்படி சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “கம்ப ராமாயணம் (பாலகாண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்)”