டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் தொகுத்த ஓலைச்சுவடிகளையும் தாள்சுவடிகளையும் அவருக்கு எழுதிய அறிஞர் பெருமக்களின் கடிதங்களையும் அவர் எழுதிய நாட்குறிப்பையும் நூல்நிலையம் பல்லாண்டுகளாக நல்ல முறையில் பாதுகாத்துவந்துள்ளது. இத்தொகுப்புகள் அனைத்தும் தமிழுக்குக் கிடைத்த அரிய கருவூலங்கள் ஆகும். சங்க இலக்கியப் பதிப்பிற்குப் பயன்பட்ட அனைத்து ஓலைச்சுவடிகளும் இன்று செவ்வியல் தமிழுக்குக் கிடைத்த அரிய ஆவணங்களாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறத்தக்க அரிய நிறுவனம் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம். ஐயர் அவர்களின் நீண்ட இலக்கிய வாழ்வில் 19ஆவது நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ஆவது நூற்றாண்டின் முதற்பகுதியிலும் அவரோடு தொடர்பு கொண்ட அறிஞர்கள் எழுதிய கடிதங்களை டாக்டர் ஐயர் அவர்கள் தமக்கே உரிய கவனத்துடன் தொகுத்து அடுத்துவரும் தலைமுறைக்கு விட்டுச்சென்ற அரிய பணி பெரிதும் போற்றத்தக்கது.
நூல்நிலையத்தில் ஏறத்தாழ மூவாயிரம் கடிதங்கள் உள்ளன. இந்தக் கடிதங்களை எழுதிய பெருமக்கள் அவரோடு சமகாலத்தில் வாழ்ந்த பெரும்புகழ் பெற்ற அறிஞர்கள் ஆவர். அந்தக் காலத்தில் தம் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரிய தகவல் சாதனம் கடிதங்கள்தாம்.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்










Be the first to review “உ. வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம்”