அறிஞர் கி.வா. ஜகந்நாதன் அவர்கள் 1961, 1962ஆம் ஆண்டில் உ.வே.சாமிநாதையர் நூலகம் வாயிலாக உ.வே.சா. எழுதிய கவிதைகள் பலவற்றையும் தொகுத்துத் ‘தமிழ்ப்பா மஞ்சரி’ என்னும் தலைப்பில் இருபாகங்களாக வெளியிட்டார். அவர் விரிவான ஒரு முன்னுரையும் தந்துள்ளார். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப்பின் தமிழ்ப்பா மஞ்சரி நூலினை நூல்நிலையம் இந்த ஆண்டில் (2025) வெளியிடுவது பெரிதும் பாராட்டிற்குரியது.
முதலில் உ.வே.சா.பாடிய துதிப்பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்றுள்ளன. அடுத்துத் தனிப்பாடல்களும், மொழி பெயர்ப்புப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. பதிப்பு நூல்களுக்கு அவர் எழுதிய பாடல்களும் குறிப்பிடத்தக்கவை.
வரலாற்றில் பதிவாக வேண்டிய ஆவணங்களாக அவர் பழகிய பெரியோர்களைப் பற்றிய பாடல்கள் அமைகின்றன. ஆதீனங்களும், அறிஞர் பெருமக்களும், நீதிபதிகளும், கவர்னர்களும், புகழ்பெற்ற வழக்கறிஞர்களும், கல்லூரி முதல்வர்களும், பெருங்கவிஞர்களும், வள்ளல்களும், பேராசிரியர்களுமாக அவருடன் பழகிய அருந் தலைவர்கள் பற்றிய செய்திகள் பல இந்நூலில் உள்ளன.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “தமிழ்ப்பா மஞ்சரி”