திருப்புகழ்ச் செல்வம்

வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்

260.00

* திருப்புகழ்ப் பாக்கள் பாராயணம் செய்வதன் பலன்கள்

* திருப்புகழ்ச் செல்வம் என்னென்ன செல்வங்களை வழங்கும்.

Add to Wishlist
Add to Wishlist

“திருப்புகழ்” என்றாலே இறைவன் புகழ் என்று பொருள். அருணகிரிநாத சுவாமிகளின் இந்த ஆழங்காண முடியாத, கரை காணமுடியாத சமுத்திரமாகிய திருப்புகழ், மற்றும், வகுப்புகள், அந்தாதி, அலங்காரம், அனுபூதி, வேல், மயில், சேவல் விருத்தங்கள் எல்லாவற்றையும் பக்தியுடன் ஆழ்ந்து, அனுபவித்து, அருணகிரிநாதர் சென்று பாடிப் பரவிய தலங்களை நேரில் கண்டு தரிசித்து, முருகப் பெருமானுடைய பல பல சிற்ப வடிவங்கள், திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் தரிசித்த முருகப்பெருமானுடைய கவின்மிகு கோலங்கள், இதுவரை இடம் விளங்காத் தலங்ளைக் கண்டறிந்து, சந்த விநோதங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டி தொண்டாற்றிவரும் திருப்புகழ்ச கிருஷ்ணனுடைய அறிய, அமானுஷ்ய முயற்சியால் திருப்புகழ்ச் செல்வம் என்ற இந்த முழுமையான பொக்கிஷம் முருகன் திருவருளால் நமக்கு கிடைத்துள்ளது.
முதல் முதலாக திருப்புகழ்ச் சுவடிகளை கண்டறிந்து திரட்டி பதிப்பித்த வ.த. சுப்பிரமணியப்பிள்ளை, தணிகைமணி வ.சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்களின் வரலாறு மற்றும் திருப்புகழ் பதிப்புகள், மாவட்ட வாரியாக தல அகராதி என்றெல்லாம் திட்டமிட்டு இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளது.
அருணகிரியாருக்குப் பின் தோன்றிய, அருளாளர்கள் பற்றியும் அவர்கள் வாயிலாக குருநாதரைப் பற்றிய செய்திகளும் சுருக்கமாகவும் மிக அருமையாகவும் தொகுக்கப் பெற்றுள்ளன. அடியார் வேண்டுவதை அளிக்கும் திருப்புகழ்ப் பாக்கள் பாராயணம் செய்வதன் பலன்கள். அதற்குகந்த பாடல்களுடன் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நூல் இது வரை உள்ள திருப்புகழ் சம்பந்தப்பட்ட எல்லாச் செய்திகளையும் தொகுத்து ஒரு கலைக் களஞ்சியமாகத் திகழ்கின்ற முதல் நூலாகும்.
மக்கட் செல்வம், மனைச்செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம், சொற்செல்வம், செவிச்செல்வம், கல்விச் செல்வம், இசைச்செல்வம், பக்திச் செல்வம் முதலிய அனைத்துச் செல்வங்களையும் தரவல்லது திருப்புகழ்ச் செல்வம்.
இவை எல்லாவற்றையும் தூய தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் திருப்புகழ் கிருஷ்ணன் எழுதி ஒரு பெரும் செல்வத்தையே நம் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார். இந்த நூல் ஆய்வாளர்களுக்கு ஒரு மூலக் கையேடாகப் பயன்படும் என்பது திண்ணம்.
இப்புத்தகத்தைப் படித்து அதன் மூலம் திருப்புகழை நன்றாகப் பயின்று அதில் உள்ள பொருட்களை அனுபவித்து அறிந்து பெரும் செல்வத்தை அடைவோமாக.
– இளங்கோவன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “திருப்புகழ்ச் செல்வம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன