பக்திப் பாடல்களைக் கேட்பவர்கள் ஸ்ரீமன்நாராயணன் ஸ்ரீமன்நாராயண, தன்னனாஹரே – பிரம்மம் ஒக்கடே பரப்பிரம்மம் ஒக்கடே, ஜோ அச்சுதானந்தா, பாவமுலோனா போன்ற பாடல்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி, சுதாரகுநாதன், உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ ஆகியோரின் தேன்குரல்களில் கேட்டிருப்பார்கள். அவற்றை எழுதியவர் தெய்விகக்கவிஞர் அன்னமாச்சார்யா. தினமும் வெங்கடாஜலபதி சன்னதியில் சுப்ரபாத சேவையின்போது இவரது ஒரு பாடல் பாடப்படுகிறது. அங்கு ஊஞ்சல் சேவையை தொடங்கி வைத்தது இவர்தான். இவர் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் இன்னமும் அந்த ஆலய பிரகாரத்தில் ஒரு தனி அறையில் பாதுகாக்கப்படுகின்றன.
அன்னமாச்சார்யா பிறந்த கிராமத்துக்கு நூலாசிரியர் சென்றுவந்த அனுபவமும் இதில் பதிவாகி இருக்கிறது. படியுங்கள். பக்தியில் நனையுங்கள்.
– ஜி.எஸ்.எஸ்.
Be the first to review “தெய்வீகக் கவிஞர் அன்னமாச்சார்யா”