நற்றிணை என்பது எட்டுத்தொகை நூல்களில் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப்படுகின்றது. “நற்றிணை நல்ல குறுந்தொகை’’ என்னும் வெண்பாவினால் இது அறியப்படும். இவ்வெண்பாவில், அகம், புறம், நற்றிணை என்னும் நூல்கள் அடைமொழியின்றிக் கூறப்பட்டுள்ளன. பிற நூல்கள் ஐந்தும் அடைமொழி கொடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. அடைமொழியின்றி இந்நூல்கள் கூறப் பெற்றிருத்தல் இவற்றிற்குத் தனிச்சிறப்பு உண்டென்பதை உணர்த்தும். இந்நூலில் உள்ள செய்யுட்களின் தொகை நானூறாகும். இந்நூலைத் தொகுப்பித்தோன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி என்பான். தொகுத்தோர் இன்னார் என்று புலப்படவில்லை. 175 புலவர்களாள் பாடப்பட்டனவாகும். நற்றிணைப்பாக்கள் பல, தொல்காப்பியம் பொருளதிகார உரையில் மேற்கோளாக வந்துள்ளன.
இது, பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையுடன் 1915இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இப்பதிப்பிற்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்கள் இரண்டு பிரதிகளை ஒப்பு நோக்குவதற்காக வழங்கியுள்ளார். நற்றிணையைப் பதிப்பிக்க வேண்டும் எனும் தமிழ்த்தாத்தா அவர்களின் வேணவா பேராசிரியர் வித்துவான் எச்.வேங்கடராமன் அவர்களின் வழி 1989ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பெற்றது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்










Be the first to review “நற்றிணை”