டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அவ்வப்பொழுது பத்திரிகைகளில் எழுதி வந்த வரலாறுகளையும், நூதனமாக எழுதியவற்றையும் தொகுத்து, ‘நான் கண்டதும் கேட்டதும்’, ‘புதியதும் பழையதும்’ என்னும் இரண்டு புத்தகங்களாக முன்பு வெளியிட்டேன். அவற்றைப் படித்த தமிழன்பர்கள் பலர், ‘இப்படியே நீங்கள் எழுதிய பிறவற்றையும் ஞாபகத்திலுள்ளவற்றையும் சேர்த்துத் தனிப் புத்தகங்களாக வெளியிட வேண்டும்’ என்று கூறி ஊக்கம் அளித்தார்கள். சில அன்பர்கள் அவற்றிற் சிலவற்றை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழிபெயர்த்துப் பத்திரிகைகளில் வெளியிட்டனர். சிலர் தாங்கள் தொகுத்த பாட புத்தகங்களில் உ.வே.சா. வின் அனுமதி பெற்றுச் சில கட்டுரைகளைச் சேர்த்துக் கொண்டனர்.
டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிவந்த வரலாறுகளில் மேலே குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களிலும் சேர்க்கப்படாதவற்றையும், அவ்வப்போது எழுதிய கட்டுரைகளையும், செய்த பிரசங்கங்ளையும் தொகுத்து, ‘நல்லுரைக் கோவை’ என்னும் பெயரோடு நான்கு பாகங்களாக வெளியிட்டார்.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்










Be the first to review “நல்லுரைக் கோவை”