பப்பத்து அகவற்பாக்களுள்ள பத்துப்பகுதிகளால் தொகுக்கப்பட்டமையின், இந்நூல் பதிற்றுப்பத்தென்று பெயர்பெற்றது. பதிற்றுப்பத்தென்பது, தமிழ்ப்பாஷையி லுள்ள பழைய இலக்கிய நூல்களுள்ளே நல்லிசைப்புலவர்களருளிச்செய்த சங்கச்செய்யுட்களாகிய எட்டுத்தொகைகளில் நான்காவது புராதன இலக்கண இலக்கியவுரைகளில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்ற பெருமை வாய்ந்தது முடியுடை வேந்தர்களாகிய சேரர்பதின்மர்கள்மீது சங்கப் புலவர் பதின்மர்கள் இயற்றியது ஐந்திலக்கணங்களுள்ளே பொருளின் பகுதியாகிய புறத்திணைத்துறைகளுக்கு இலக்கியமாக அமைந்துள்ளது.
பழந்தமிழ் இலக்கியங்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தது பதிற்றுப்பத்து. பண்டைச் சாற்றோர் இதனை “ஒத்த பதிற்றுப்பத்து” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பித்தனர். சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களுள்ளும் சேரர் எனும் ஓர் இனத்து மாமன்னர்களின் கொடை, வீரம், செங்கோன்மை போன்ற அரசியற் கருத்துக்களுடன், பண்டைத் தமிழ் மக்களின் பண்பாட்டுச் செய்திகளையும் கருப்பொருளாகக் கொண்டு விவரிக்கின்றமையால், வரலாற்றுக் கருத்துப் பெட்டகமாகும். ஒவ்வொரு சேர வேந்தனைப் பற்றியும் பத்துப்பத்து அகவற் பாக்களுள்ள பத்துப்பாட்டுகள் சேர்ந்து அமைந்ததால் பதிற்றுப்பத்து என்னும் பெயர் வந்தது. இந்நூலின் முதற்பத்தும் கடைசிப்பத்தும் எங்கும் கிடைக்கவில்லை. எண்பது பாடல்களே கிடைத்துள்ளன.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “பதிற்றுப்பத்து”