பரிபாடல் பழந்தமிழ் இசைநூலாகவும் விளங்குகிறது. ‘இசைபரிபாடல்’ என்ற பெயர் பரிபாடலிலேயே வருவது குறிப்பிடத்தக்கது. பாடல்களுக்கு இசை அமைத்தவர் பெயர்களும் குறிப்பிடப்பெற்றுள்ளன. கண்ணகனார், கண்ணனாகனார், கேசவனார், நல்லச்சுதனார், நன்னாகனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார் முதலியோர் பரிபாடலுக்கு இசைவகுத்த பெருமக்களாவர்.
நைவளம், மருதம் ஆகிய பண்கள் பற்றிய செய்தியைப் பரிபாடலில் காணலாம். பாலையாழ், நோதிறம், காந்தாரம் ஆகிய பண்முறையில் பரிபாடல் தொகுக்கப் பெற்றுள்ளது.
இசை பற்றிய அரிய செய்திகளை எடுத்துரைக்கும் இந்நூலை நூறு ஆண்டுகளுக்குமுன் உ.வே.சாமிநாதையர் அவர்கள் 1918ஆம் ஆண்டில் முதன் முதலாகப் பரிமேலழகர் உரையோடு சேர்த்துப் பதிப்பித்தார். 1935இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பு பொருட் சுருக்கம், விசேடக் குறிப்புடன் பின்னர் விரிவாக்கம் செய்யப்பெற்றது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “பரிபாடல்”