கள்ளக்காதல் எதிரொலி: கணவன் கொலை. மனைவியும் காதலனும் கைது.
குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறை – அதிரடி தீர்ப்பு.
இந்தத் தலைப்புச் செய்திகளில் மக்கள் பார்த்தது சுவாரசியமான ஆபாசத்தை மட்டும்தான்.
பின்னணியில் இருந்ததோ அன்பின்மை என்ற மிகப் பெரிய காடு. அது பச்சைப்புடவைக்காரியின் கண்களுக்கு மட்டுமே தெரிந்தது. காட்டின் ஓரத்தில் இருந்த ஒரு காய்ந்த மரத்தின் பொந்தில் அன்பென்னும் சிறிய அக்னிக் குஞ்சை வைத்தாள் அவள். வெந்து தணிந்தது காடு. இந்த நூல் மொத்தமும் அந்தத் தழல் வீரத்தைப் பற்றியதுதான்.
காடு எரிந்தபின் மிஞ்சியது சாம்பல் அல்ல. திருநீறு.
அந்த அன்பின் பிரசாதம் மானுட இனத்தையே வாழவைக்கும்.
– சுமிதரா தேவி










Be the first to review “வெந்து தணிந்தது காடு”