கலித்தொகை நூலுக்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர் சிறப்பானதொரு உரையெழுதியுள்ளார். தலைசிறந்த இவருரையுடன் இந்நூலை முதன்முதலில் 1887இல் அச்சியற்றி வெளியிட்டவர் யாழ்ப்பாணம் திரு.சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள். சி.வை.தா. அவர்களின் பதிப்பினை யடுத்து ஆராய்ச்சிக் குறிப்புகள் பலவற்றோடும், மேற்கோட் குறிப்புகளோடும் சிறந்த முறையில் பதிப்பித்தவர் தமிழ் வித்துவான் இ.வை. அனந்தராமையரவர்கள். இவர் கலித்தொகையில் பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி ஆகியவை 1925ஆண்டிலும் நெய்தற்கலி 1931ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் கலித்தொகை மூலம் மட்டும் 1930இல் நோபில் அச்சுக் கூடத்தின் வழியாகப் பதிப்பித்துள்ளார். திரு.தை.ஆ.கனகசபாபதி என்பவர் பாலைக்கலிக்கு மட்டும் புத்துரை எழுதி வெளியிட்டுள்ளார்.
இ.வை.அனந்தராமையரின் கலித்தொகை பதிப்பினைப் பாராட்டி உ.வே.சாமிநாதையர், இரா.இராகவையங்கார் ஆகியோரும் இந் நூலைப்பற்றி மதிப்புரை வழங்கியுள்ளனர். “கலித்தொகையின் முதற்பகுதியை யறிந்து மிக்க ஆநந்த மடைந்தேன். இருபது வருடங்களுக்குக் குறையாமற் பழகி இவர் களுடைய ஆற்றல்களை ஒருவகையாக யான் அறிந்திருப்பினும் இதுகாறும் இவர்கள்பாற் கண்டறியப்படாமலிருந்த விசேட ஆற்றல்கள் பலவற்றை இப்பதிப்பால் நன்கு அறிந்தேன். சிறந்த ஒரு நூல் எத்தனை வகையாக ஆராய்ச்சி செய்து பதிப்பிக்கப்பட வேண்டுமோ அத்தனை வகையிலும் சிறிதும் குறைவின்றி ஆராய்ச்சி செய்யப்பெற்று இப்புத்தகம் விளங்குகின்றது என்று உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “கலித்தொகை”