சிலப்பதிகாரம்

டாக்டர். உ. வே. சாமிநாதையர்

500.00

Add to Wishlist
Add to Wishlist

“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று மகாகவி பாரதியார் சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தையும், தமிழகத்தையும் போற்றிப் புகழ்கிறார். இறைவன், முடியுடை மன்னன், ஒப்பற்ற வீரதீரச் செயல்களைச் செய்த தலைவன் ஆகியோருள் எவரையேனும் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இலக்கியம் படைப்பது மரபு. ஆனால் இளங்கோவடிகள் வணிகக் குடி மக்களாகிய கோவலன், கண்ணகியை வைத்துக் காப்பியம் இயற்றி யுள்ளார். இக்காப்பியத்தினுள் திருமால், ஆறுமுகன், இந்திரன், பலதேவன், இயக்கி போன்ற தெய்வங்கள் கூறப்படுகின்றனராயினும் மங்கல வாழ்த்துப் பாடலுள் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகிய இயற்கை சக்திகளைப் போற்றிப் பரவும் புதுமை காணப்படுகிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் புகழையும், அவர்களது தலைநகரங்களின் பெருமைகளையும் விரிவாகக் கூறும் இந்நூல் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் பாடுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் குடிமக்களை முதன்மையாகக் கொண்டதால் குடிமக்கள் காப்பியம் என்றும் உரைப்பாட்டும் இசைப்பாட்டும் இடை இடையே பயின்று வரப் பெற்றதாதலின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் நாடக உறுப்புகளைக் கொண்டதால்  நாடகக் காப்பியமென்றும் பலவாறாகப் புகழப்படுகின்றது.

டாக்டர். உ. வே. சாமிநாதையர்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சிலப்பதிகாரம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன