பாண்டிவள நாட்டில் மதுரையம்பதியில் ஸ்ரீஅங்கயற்கண் அம்மையோடு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசோமசுந்தரக்கடவுள் அருளிய சங்கப்பலகையில் அக்கடவுளோடு ஒப்ப வீற்றிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்களாகிய நக்கீரனார் முதலிய எண்மரால் இயற்றப் பெற்ற திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடா மென்னும் *பத்துமாகும்; “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை, பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய, கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப், பாலை கடாத் தொடும் பத்து” என்பதனால் இப்பெயர்களும் இவற்றின் முறையும் விளங்கும். இவை, மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் இயற்றிய உரையைப் பெற்றுள்ளன. அவ்வுரையினால் அதற்கு முன்பும் இவற்றிற்கு வேறுரை இருந்ததென்று தெரிகிறது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “பத்துப்பாட்டு 1, 2”