பாரதி தரிசனம்

பத்மவாசன்

200.00

Add to Wishlist
Add to Wishlist

வஞ்சகம், சூது, பொறாமை என்பன ஏதுமற்ற மானுடன். தேசபக்தி, மொழிப்பற்று, தன் இனம் தன் மக்கள்,

உயிர்களிடத்தில் அன்பு. இது தவிர வேறு சிந்தனை ஏதுமற்ற மகா கவிஞன். குழந்தை போன்ற உள்ளத்தோடு, குவலயம் போற்றும் கவிதைகள் படைத்தவன்.

படைத்தவனே வியக்கும்படியான குணக்குன்று. மானம் பெரிது என்று வாழ்ந்த கவிச்சிம்மம். பொதுவாகவே நம்மால் வியக்கப்படும் மனிதர்களை நெருங்கும் போது, அடச்சீ! இவ்வளவு தானா! என்று ஆகிவிடுவது சகஜம். ஆனால் பாரதியை அண்டி இருந்தவர்கள், நெருங்கிச் சென்றவர்கள், பழகியவர்கள் அனைவருமே கூறியது, பாரதி ஒரு அப்பழக்கற்ற மனிதன் என்பதே. அவரை பக்தியோடு வணங்கி நிற்பார்களேயன்றி விமர்சித்தவர் யாருமேயில்லை.

நமது வாழ்க்கையில் இன்று நாம் பெரிதும் மதிக்கும் மனிதர்களையெல்லாம் புடம்போட்டு எடுத்து நிறுத்தியவன் பாரதி என்று தெரியவரும்போது எப்பேற்பட்ட பிறவி இவன் என்று வாய் பிளக்கிறது. கரங்கள் குவிகின்றன.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரதி தரிசனம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன