போலிக் அமில மாத்திரையைவிட சத்தான அரிசி கஞ்சி!
சமீப காலங்களில் உடலாலும், மனதாலும் பெண்கள் பல உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பிட்ட வயதிற்கு முன்பே பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விடுவது, தற்போது பொதுவான விஷயமாகி விட்டது. உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பது, மின்னணு சாதனங்களை அதிக அளவு பயன்படுத்துவதால ஏற்படும் பாதிப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள்.
அதிக இனிப்பு பண்டங்கள், குறிப்பாக கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகள், பீட்சா, பர்கர் போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுகள், எண்ணெயில் பொரித்த பண்டங்களை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கண் மை, லிப்ஸ்டிக், முகத்தில் பூசப்படும் கிரீம்கள் என்று எந்த அழகு சாதனப் பொருட்களையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
வயதிற்கு வந்தபின் குழந்தைகளுக்கு, கருப்பட்டி, கறுப்பு உளுந்து சேர்த்த களியை வாரம் ஒரு முறையாவது கொடுப்பது அவசியம்; இது, இடுப்பு எலும்பு, தசைகளை வலிமைப்படுத்த உதவும். மாதவிடாய் நேரத்தில் சில குழந்தைகளுக்கு தாங்க முடியாத வலி இருக்கலாம். இதற்கு வலி நிவாரணிகள் தருவதை தவிர்த்து, புளிக்காத தயிரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு பிழிந்து தந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி ஓரளவு குறையும். ஒழுங்கான உதிரப் போக்கு இல்லாவிட்டால், பீர்க்கங்காயின் சதைப் பகுதியை சிறிது எடுத்து, அதனுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயத் துாள் சேர்த்து சாப்பிடச் சொல்லலாம். இதை வெறும் வயிற்றில் மூன்று, ஐந்து நாட்கள் எடுத்தால் உதிரப் போக்கு ஒழுங்காகும்.
மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு சீரற்ற மாதவிடாய் வந்தால், கால் டம்ளர் சதைக் குப்பையில் அரை டம்ளர் நீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து, குளிர்ந்த பின் வெறும் வயிற்றில் மூன்று, ஐந்து நாட்களுக்கு கொடுக்கலாம். அதிக ரத்தப் போக்கு இருந்தால் நெய் அல்லது வெண்ணெயுடன் மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் சேர்த்து குழைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
உடல் பலவீனம், ரத்த சோகை இருந்தால் வெள்ளை படுதல் அதிகமாக இருக்கும். இதற்கு பச்சை சுண்டைக்காய், கோவைக்காய், வெள்ளை பூசணி போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவில் கல்லீரல், மண்ணீரல் இரண்டும் வெள்ளை படுதலுக்கு சிறந்த மருந்தாகும். அது போல கடுக்காய் பொடி அரை டீஸ்பூன் எடுத்து, அரை லிட்டர் நீரில் கலந்து, ஜனனப் பகுதியை கழுவுவதும் தீர்வைத் தரும். கர்ப்பிணிகள் புழுங்கல் அரிசி சாதம் வடித்த நீரில், இரண்டு சொட்டு நெய் விட்டு காலையில் குடிக்கலாம். இது, போலிக் அமில மாத்திரையைக் காட்டிலும், பல மடங்கு அதிக பலன் தரும். மாதவிடாய் நிற்கும் சமயத்தில், சத்தான காய்கறிகள், பழங்கள், பச்சைப் பயிறு, கறுப்பு சுண்டல் வேக வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்வது நல்லது. வாரத்திற்கு இரண்டொரு நாட்கள் பிரண்டைத் துவையல் சாப்பிடலாம்.
மகளிர் ஆரோக்கியமும் மருத்துவத் தீர்வுகளும்
கீதா கெங்கையா₹380.00
பெண் குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?
கருப்பட்டி, கருப்பு உளுந்து சேர்த்த களியைக் கொடுப்பது எதற்காக?
Weight | 0.300 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “மகளிர் ஆரோக்கியமும் மருத்துவத் தீர்வுகளும்”