எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது. அகநானூற்றுப் பாடல்கள் நூற்று நாற்பத்தைந்து புலவர்களால் பாடப் பெற்றவை. இவற்றைத் தொகுத்துத் தந்தவர் புலவர் மதுரை உப்பூரிகுடிகிழான் மகனார் உருத்திரசன்மர். அகநானூறு நூல் நெடுந்தொகை எனவும் வழங்கப்பெறும்.
அகநானூறு மூன்று பிரிவுகளை உடையது. அவை களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்பன. செய்யுளின் நடைநயம் கருதி இம்மூன்று பிரிவுகளை அமைத்தனர் என்பர்.
அகநானூற்றுத் தொகுப்பில் ஒற்றை எண்ணுடைய பாடல்கள் எல்லாம் பாலைத்திணையைச் சார்ந்தவை. இரண்டாவது பாட்டும் எட்டாவது பாட்டும் குறிஞ்சித் திணை; நான்காவது பாட்டு முல்லைத் திணை; ஆறாவது பாட்டு மருதத் திணை; பத்தாவது பாட்டு நெய்தல் திணை. அகநானூற்றில் அமைந்துள்ள இவ்வமைப்பு முறை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
அகநானூற்றில் வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட பல பாடல்களால் அக்காலத்திய தமிழகம் பற்றியும் பண்பாடு பற்றிய செய்திகளையும் தமிழக வரலாறு பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. வள்ளல்கள் பற்றிய வரலாற்றையும் அறியமுடிகிறது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “அகநானூறு (களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை)”