குறுக்கெழுத்துப் புதிர்கள் என்பதற்கு தனியான வாசகர் வட்டம் உண்டு.
இந்து மதம் தொடர்பான புராணங்கள் மற்றும் இந்து மதம் போதிக்கும் நன்னெறிகள் தொடர்பான குறிப்புகளை மட்டுமே கொண்ட குறுக்கெழுத்துப் புதிர்கள் மேலும் தனித்துவம் கொண்டவை. புதிய முயற்சியாக உருவான அப்படிப்பட்ட 50 புதிர்கள் இந்த நூலில் (முதல் பாகத்தில்) இடம் பெற்றுள்ளன.
இந்து மதம் குறித்த உங்கள் நினைவாற்றலை சோதித்துப்பார்க்க உதவும் புதிர்கள் இவை. இதுவரை அறியாத சில தகவல்களையும் நீங்கள் இவற்றின் மூலம் அறிய வாய்ப்பு உண்டு.
கையில் ஒரு பேனாவுடன் இந்த புத்தகத்தை அணுகுங்கள். விடைகளைக் கண்டுபிடித்து உற்சாகம் கொள்ளுங்கள்.
இந்து மதம் குறித்த விவரங்களை அடுத்தடுத்த தலைமுறையினரும் அறிய, வித்தியாசமான கோணத்தில் உதவும் நூல் இது.









Be the first to review “ஆன்மிக குறுக்கெழுத்துப் புதிர் (பாகம் – 1)”