வைணவத்தில் பகவான் பெரியவனா,
பாகவதன் உயர்ந்தவனா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டால், பகவானே முன்வந்து சொல்வான்…
“நான் பெரியவன் அல்ல… எனது பக்தன் தான் உயர்ந்தவன்” என்று.
அப்படிப்பட்ட உயர்ந்த குணநலன்களை கொண்டவர்கள் தான் ஆழ்வார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் விஷ்ணு புகழ் பாடும் தொகுப்பை நமக்கு அருளியவர்கள், அவர்கள். அந்த அருளாளர்களின் அற்புத வரலாற்றை இந்த நூல் அருமையாக விளக்குகிறது.
108 திவ்ய தேசங்களின் பட்டியலையும்
இதில் இணைத்துள்ளது வெகு சிறப்பு. பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடை நடந்து வருகிறது இந்த புத்தகம்.









Be the first to review “ஆழ்வார்கள் அருளிய அற்புதங்கள்”