தொட்டி கீழே விழுகிறது. மீன்கள் எல்லாம் துடிதுடித்துச் சாகும் காட்சி பயங்கரமாக இருக்கிறது. ஒரு கதையில் இப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் அதற்கு “வீ…ல்ல்ல்ல…”, “ஆவிகளின் அட்டகாசம்”, “பேய்களின் அலப்பறை” போன்ற தலைப்புகளைத்தான் வைக்க வேண்டும். ‘உறவுப் பாலம்’ என்ற தலைப்பு பொருந்துமா?
அமானுஷ்ய நிகழ்வுகளின் பின்னணியில் பார்க்கும்போதுதான் உறவுகளின் வலிமையை உணர முடிகிறது. அன்பின் ஆற்றல் தெரிகிறது. காதலின் வீரியம் வெளிப்படுகிறது. தலைப்பின் பொருத்தம் புரிகிறது.
பயங்கரமான சம்பவங்களுக்குக் காரணம் பேய்களோ பிசாசுகளோ இல்லை; வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதின் சக்திதான் என்ற அறிவியல் பூர்வமான விளக்கம் கிடைக்கும்போது நாம் திடுக்கிடுகிறோம். அந்தத் திடுக்கிடலில் அன்பின் மகத்துவத்தை நமக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறது இந்த உறவுப் பாலம்.
பயத்தில் தொடங்கி, கண்ணீரில் நனைந்து, காதலில் மூழ்கி, அன்பில் நிறைவு பெலும் மிகவும் வித்தியாசமான கதை.
– சுமித்ரா தேவி
| Weight | 0.450 kg |
|---|---|
| Dimensions | 22 × 14 × 1 cm |
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.










Be the first to review “உறவுப் பாலம்”