நூலின் பாடுபொருளையும், சிறப்பையும் சுருக்கச் சொல்லி விளங்கவைக்கும் அருமைப்பாடு உடையது பாயிரம். இன்று அதனைப் பல பெயர்களில் அழைக்கின்றோம். முந்நாளில் இதனை அணிந்துரை, அபிப்ராயம், அபிப்ராய பத்திரம், பாராட்டுரை, சிறப்புப் பாயிரம், சிறப்புரை, நந்திசெய்யுள் (நாந்திசெய்யுள்), நல்லுரை, நற்சாட்சிப் பத்திரம், நன்மதிப்புரை, நூன்முகம், புகழ்ப்பூந்துணர், பாராட்டுரை, முகவுரை, முன்னுரை, வாழ்த்துரை எனப் பல பெயர்களில் அதனை அழைத்தனர்.
நூலாசிரியர் சிறந்த புலமையாளர்களிடத்தும் பெரும்பதவியில் இருப்பவர் களிடமிருந்தும் அணிந்துரை பெற்று நூலின் முற்பகுதியில் அமைப்பது மரபு.
தமிழ்ச்சான்றோர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அக்காலத்தில் தம் நூற்பதிப்புப்பணியாலும் தமிழ்ப்புலமையாலும் பெரும்புகழ் பெற்றிருந்தவர். அக்கால நூலாசிரியர்கள் பலரும் அவரிடம் விரும்பிவேண்டித் தங்கள் நூலிற்குப் பாயிரம் தருமாறு அன்போடு வேண்டுவர். அவரும் பலருக்கு அவர்களுக்குப் பாயிரம் அளித்து மகிழ்வித்ததை ‘என் சரித்திரம்’ காட்டும். அவர்தம் பாயிரத்தாலும் அணிந்துரையாலும் அந்நூல் பெருமதிப்புப்பெறும்.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “உ.வே. சாமிநாதையர் அணிந்துரைகள் – சிறப்புப்பாயிரங்கள்”