தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான என் சரித்திரம் ஆனந்தவிகடன் இதழில் தொடர் கட்டுரையாக 1940ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. உ.வே.சா.அவர்களின் திருமகனார் எஸ்.கலியாணசுந்தரம் ஐயர் பெருமுயற்சியால் 1950ஆண்டு என் சரித்திரம் முதல் பதிப்பு வெளிவந்தது. இச்சரித்திரம் எங்கள் ஊர் தொடங்கி மணிமேகலைப் பதிப்பு வெளிவந்த வரலாற்றோடு (1898) 122அத்தியாயங்கள் முடிவடைகிறது. உ.வே.சா.அவர்களின் வரலாற்றின் பிற் பகுதியை எழுதவேண்டும் என்ற எண்ணம் அவருடைய திருமகனார் திரு கல்யாணசுந்தரம் ஐயர் அவர்களுக்கு இருந்துள்ளது.
1950இல் வெளிவந்த என் சரித்திரம் முகவுரையில் “பின் நிகழ்ச்சிகள்சம்பந்தமான குறிப்புகள் ஒழுங்குப்படுத்தி வைக்கப்பெற்றுள்ளன. திருவருள் துணை கொண்டும் அன்பர்கள் உதவிகொண்டும் என் சரித்திரத்தின் தொடர்ச்சியாக ஐயரவர்கள் வரலாற்றைப் பூர்த்தி செய்து வெளியிடலாமென்று கருதி யுள்ளேன்” என்று திரு கல்யாணசுந்தரம் ஐயர் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதவில்லை. அவர் சேகரித்து வைத்த குறிப்புகள், உ.வே.சா.அவர்களுக்குப் பிறர் எழுதிய கடிதங்கள், உ.வே.சா.நாட்குறிப்புகள், பதிப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் ‘என் ஆசிரியப்பிரான்’ என்ற தலைப்பில் உ.வே.சா.அவர்களின் பின்பகுதி வரலாற்றை (1899-1942) எளியநடையில் அழகாக எழுதியுள்ளார். இந்நூல் போலீஸ் அதிகாரியின் செயல் தொடங்கி கிராமம் பெற மறுத்தது, பாட புத்தகம் எழுத மறுத்தது, பழைய மரபு, சொந்த வீடு, பட்டம் பெற்றது, பெரியோர் சந்திப்பு, ஓய்வு, சிதம்பரம் வாழ்க்கை, நான் ஆசிரியரிடம் சேர்ந்தது, காந்தி தரிசனம், இறுதிக் காலம், பண்பு நலன் என 40 தலைப்புகளில் சுவைபட எழுதி 1993இல் நூல்நிலைய வெளியீடாக வந்துள்ளது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “என் ஆசிரியப்பிரான்”