தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் (1855-1942) தம் தமிழ்ப் பணியால் பெரும்புகழுக்குரியவராய் வாழ்ந்தார். சிறந்த தமிழ்த்தொண்டால் தமிழுலகு முழுவதும் அறிந்த பெருந்தகையாய்ப் புகழ்பூத்து விளங்கினார். தமிழகம் முழுவதும் சென்று பல ஊர்களிலும் உள்ள அரிய சுவடிகளை விடா முயற்சியோடு தொகுத்தார். அவற்றைக் கற்று ஆராய்ந்து படி எடுத்துப் பிழையறப் பதிப்பித்தார். அந்நூல்களுக்கு அரிய ஆராய்ச்சி முன்னுரைகளைத் தந்து பழந்தமிழின் பெருமையை எடுத்துரைத்தார். ஆராய்ச்சித் தரமிகுந்த அம்முன்னுரைகள் அவர்தம் கடுமையான உழைப்பிற்குச் சான்றாகத் திகழ்கின்றன.
உ.வே.சாமிநாதையர் அவர்களின் உரைநடை நூல்களுள் அவர் எழுதிய ‘என் சரித்திரம்’ என்னும் தன் வரலாற்று நூல் பெரும்புகழ் பெற்றது. தமிழைக்கற்றுப் புலமைபெற்று அரிய நூல்களைப் பதிப்பித்துத் தமிழின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய அவரின் வரலாறு இந்தத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வாழ்க்கை வரலாறாகும். தன்னுடைய வரலாற்றை மட்டுமேயன்றித் தன் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களின் வரலாற்றையும் எழுதி வெளியிட்டவர் உ.வே.சா. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் வரலாறும் உ.வே.சாமிநாதையர் அவர்களின் தன் வரலாறும் சென்ற நூற்றாண்டின் தமிழ் வரலாறு எனலாம்.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “என் சரித்திரம்”