ஐங்குறுநூறு

டாக்டர். உ. வே. சாமிநாதையர்

250.00

Add to Wishlist
Add to Wishlist

ஐங்குறுநூறு ஐந்து திணைகளுக்கும் நூறு நூறு அகப் பாடல்களைக் கொண்ட நூல். குறைந்த அடிகளைக் கொண்ட பாவால் அமைந்தது. எனவே ‘ஐங்குறுநூறு’ எனப் பெயர் பெற்றது. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறு அடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களால் இந்நூல் அமைந்தது.

முதல் நூறு பாடல்கள்  ‘மருதம்’ ஓரம்போகியாரால் பாடப்பெற்றது. இரண்டாம் நூறு ‘ நெய்தல்’ அம்மூவனாராலும், மூன்றாம் நூறு ‘குறிஞ்சி’ கபிலராலும், நான்காம் நூறு ‘பாலை’ ஓதலாந்தையாராலும், ஐந்தாவது நூறு ‘முல்லை’ பேயனாராலும் பாடப்பெற்றது. தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

ஐந்நூறு பாடல்கள் ஐந்தாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு நூறும் பத்துப்பத்தாக தொகுக்கப்பட்ட நுண்மை குறிப்பிடத் தக்கது.

சொற்சுவையும் பொருட்சுவையும் உடைய இந்நூல் விழுமிய நடையை உடையது. ஓசைநயம் வாய்ந்தது. இயற்கை அழகினைப் படம் பிடித்துக்காட்டும் ஒவ்வொரு பாடலும் மூன்றே அடிகளில் முதல், கரு, உரு ஆகிய முப்பொருளையும் விளக்கிக்கூறும்.

டாக்டர். உ. வே. சாமிநாதையர்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஐங்குறுநூறு”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன