சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் 1926ஆம் ஆண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களுக்கு ஒரு மடல் வந்தது. அம்மடலில் ‘தாங்கள் பல்கலைக்கழகத்தில் பத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். உ.வே.சா. அவர்களும் இசைவு தெரிவித்து 1927ஆம் ஆண்டில் அச்சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த நிகழ்வு இது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்படியொரு தொடர் சொற்பொழிவு இதற்குமுன் நடந்திருக்குமா என்பது குறித்து ஆராய வேண்டும். 1927ஆம் ஆண்டில்தான் தமிழ்த்துறை தொடங்கப்பெற்றது என்பர். அப்பொழுது அத்துறைக்குப் பெயர் ‘கீழைக்கலை ஆய்வு மன்றம்’ என்பதாகும். திராவிட மொழிகள் பற்றிய பொது ஆய்வுகள் நிகழ்ந்தன.
இப்பொழுது இருப்பது போல் அக்காலத்தில் அறக்கட்டளைப் பொழிவுகள் இல்லை. உ.வே.சா. அவர்களே முதன் முறையாகச் செய்திருக்கக் கூடும்.‘சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைகள் அக்காலத்தில் புதுமையானவை. இக்கட்டுரைகளால் சங்க இலக்கியத்தின் சிறப்பினை நன்கு உணர முடிகின்றது. உ.வே.சா. அவர்கள் தொடங்கி வைத்த இக்கட்டுரைப் பொருண்மைகளில் நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து இன்னும் ஆய்வுகள் நடைபெறுவது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்”