திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்து நூல்களையும் பத்துப்பாட்டு எனத் தொகுத்து அமைத்தனர். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள் எட்டினையும் எட்டுத்தொகை எனப் பெயரிட்டுத் தொகுத்தனர்.
பத்துப்பாட்டும் நீண்ட நெடும்பாட்டுகளாக விளங்கிய மையால், குறும்பாடல்களைத் தொகுத்து எட்டுத்தொகை என வழங்கினர். 15 நூல்களோடு அறிஞர்கள் எழுதிய பிற மூன்று நூல்களையும் சேர்த்துச் ‘சங்க இலக்கியத் தொகுப்பு’ என்னும் பெயரில் இவ்வெளியீடு அமைகின்றது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “சங்க இலக்கியத் தொகுப்பு – 16 தொகுதிகள்”