சமணத் தமிழறிஞர்கள் தமிழுக்குப் பெரும்பங்களிப்பைச் செய்தவர்கள் அவற்றுள் புகழ்பெற்ற இலக்கண நூல்களும் இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் எனப்பலவாகும். காப்பிய வகையினுள் சீவகசிந்தாமணி என்னும் நூல் புதிய வகையினதாய் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. நூலின் தன்மையாலும் சிந்தாமணி எனச் சீவகன் புனைந்துரைப்பதாலும் நூலின் பெயர் சீவக சிந்தாமணி எனப் போற்றப் பெற்றது.
சீவகன் வரலாறு குறித்தும் அவன் புரியும் திருமணங்கள் குறித்தும் மிகமிகச் சுவையோடு எடுத்துரைப்பதால் இந்நூலுக்கு மணநூல் என்றும் பெயர் உண்டு. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை சுரமஞ்சரி, இலக்கணை என எண்மரை சீவகன் மணப்பதாக இந்நூலின் கதை அமைகின்றது. ‘காமதிலகன்’ என்று அவனுக்குச் சிறப்புப் பெயரையும் சூட்டி மகிழ்கிறார் ஆசிரியர். இந்நூல் 13 இலம்பகங்களையும் 3145 செய்யுட்களையும் கொண்டு விளங்குகின்றது. விருத்தப்பாவின் அமைந்த முதல் நூல் சிந்தாமணி.
சீவகன் கதையை இலக்கிய நயமிக்க காப்பியமாக இயற்றுகிறார் திருத்தக்கதேவர். பல்துறை வல்லுநனாகச் சீவகனைப் படைத்துத் தன்னேரிலாத தலைவனாகக் காப்பியத்தில் சீவகனை உருவாக்கிறார். சிந்தாமணிக் காப்பியம் இசை, மருத்துவம், மந்திரம், சோதிடம் எனப் பல செய்திகளின் களஞ்சியமாகத் திகழ்கிறது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “சீவக சிந்தாமணி 1, 2”