செறுத்த வசனம் என்றால் பலபொருளையும் உள்ளடக்கின உரைநடை எனப் பொருள்படும். பல்வேறு வகையான செய்திகளை உரைநடையில் அமைத்துக்காட்டி உரைநடைக்கு ஓர் வலிமையைத் தமிழில் உண்டாக்கியவர்கள் திரு.உ.வே.சா. அவர்கள். நினைவு மஞ்சரி என்றால் நினைவுகளாகிய பூங்கொத்து எனப் பொருள்படும். பல்வகையான நிறமும் மணமும் பொருந்திய பல மலர்களால் ஆகிய பூங்கொத்தே ஐயர் அவர்களின் நினைவில் மலர்ந்துள்ளன. பூங்கொத்து என்றவுடன் அதன் நறுமணம் நம்முள்ளே நிறைவதை அறிவதுபோல இந்நினைவு மஞ்சரியின் ஒவ்வொரு சொல்லிலும் தமிழ்மணம் கமழ்வதைப் பார்க்கலாம்.
நாள்தோறும் நாம்சென்று வழிபடும் பெருமாளை ஐயர் அவர்களும் வழிபடச் செல்கிறார்கள். பெருமாள் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று காணப்படுகிறதே அது என்ன என்று கேட்கிறார்கள். அருகில் இருக்கிற தர்மகர்த்தா அதுதான் செண்டு என்கிறார். உடனே ஐயர் அவர்களுக்கு வளைந்த பிரம்பு போன்ற அந்தக் கருவியால் துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்தது நினைவுக்கு வருகிறது. கரிகாலன் கையில் செண்டால் இமயமால்வரை திரித்தது நினைவில் நின்றது. அவனுக்குச் செண்டளித்த ஐயனாரும் வந்தார். செண்டலங்காரப் பெருமாள் அவர் மனத்தில் தமிழில் செண்டு என்னும் சொல்லுக்குரிய பொருளை விளக்கிக்கொண்டு குடியேறுகிறார்.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “நினைவு மஞ்சரி”