மணிமேகலை தமிழில் தோன்றிய முழுமையான சமூக மறுமலர்ச்சிக் காப்பியமாகத் திகழ்கிறது. ஆண்-பெண் சமத்துவம், சமூக அமைப்பில் சமத்துவம், சமூகநல மேம்பாட்டுப் பணிகள், நீதி வழங்குவதில் புதுமை எனப் பல மறுமலர்ச்சிக் கருத்துக்களைக் காப்பிய ஆசிரியர் இதில் எடுத்துரைக்கிறார்.
மணிமேகலை தலைமை மாந்தரின் பெயரைக் கொண்ட முதல் காப்பியம். ஒரு பெண்ணை மட்டுமே தலைமை மாந்தராகக் கொண்டு, இம்மைப் பிறப்பும் முந்தைய பிறப்புமாக முந்தைய பிறப்புமாக அவளது வரலாற்றையே முழுமையாக விவரிக்கிறது. மணிமேகலைக்கு இணையான தலைமை மாந்தர் இதில் இடம் பெறவில்லை.
மணிமேகலை என்ற இளம்பெண் காப்பியத்தின் தன்னேரில்லாத தலைவி. கல்வித் துறையில் நுட்பமானது கடினமானது எனக் கருதப்படுகிற சமயக் கல்வியில் தேர்ந்த புலமை பெறுகிறாள். நூலறிவும் அனுபவ நுண்ணறிவும் பொருந்தியவளாகி, உலகில் சிறப்புடன் வாழ்தற்கான அறநெறிகள் பலவற்றைப் பிறர்க்குக் கற்பிக்கும் அளவுக்குப் பேராசிரியராக அறிவில் உயர்கிறாள்.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “மணிமேகலை”