வரதா வரம் தா

இந்திரா சௌந்தரராஜன்

425.00

Add to Wishlist
Add to Wishlist

வரதா வரம்தா என கேட்கும் இந்த புத்தகம் கேட்காமலேயே வரம்தரும் அத்திவரதனாம் வரதராஜன் பற்றிய தொகுப்பு. ஆசிரியர் இந்திரா செளந்தர்ராஜனின் தெளிந்த எளிமையான இனிமையான நடைக்கு மற்றொமொரு ரத்தினக்கல் பதித்துள்ளது இந்நுால். காஞ்சியின் வரதனை ராமானுஜரும் வேதாந்த தேசிகனும் போற்றி பாடியதைத் தாண்டி மிலேச்சர்கள் காலத்தில் காஞ்சிக்கு ஏற்பட்ட நிலை, திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு ஏற்பட்ட நிலை, இந்துக்களின் வழிபாடு கேள்விக்குறியானது குறித்து முழுமையாக விளக்கியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரை வந்து திருமலை வரை வரிசையாக அழகிய மணவாளப்பெருமாள் புறப்பாடாகி 60ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்ரீரங்கம் வந்த கதை படிக்க படிக்க மனதை நெகிழச் செய்கிறது. வரம் தரும் வரதராஜன் அத்திவரதனான கதை, அனந்தசரஸ் குளத்தின் ஜென்மாந்திர பெருமைகள் என பக்திக்கு கட்டியம் கூறுகிறது இந்நுால்.

மாசுபடாத கிணற்று நீரைப் போல நம் முன்னோர்களின் மாசுபடாத பக்தியை அந்தக்கால நடைமுறைகளை விளக்கியுள்ள ஆசிரியரின் எழுத்துக்கு வரதன்… நிச்சயம் வரம்தருவான். படிக்கும் வாசகர்களுக்கு பக்தியும் முக்தியும் நிச்சயம்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “வரதா வரம் தா”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன